பெண் சிவாஜி நம்ம ஆச்சி மனோரமா பிறந்ததினம் இன்று! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆச்சி அம்மா! சினிமா துறையில் நன்கு பரிச்சயமான பெயர். தென்னிந்திய திரைப்பட பழம்பெரும் நடிகையான மனோரமா இந்திய சினிமா வரலாற்றில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ் ரசிகர்களாலும் 'ஆச்சி' என அழைக்கப்பட்டவர். ஆண் நடிகர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலுக்கு நிகராக கோலோச்சி, 'பெண் சிவாஜி' எனப் பெயர் வாங்கியவர். தென்னிந்திய முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணாதுரை, மு. கருணாநிதி, ஜெயலலிதா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., முன்னாள் ஆந்திர முதலமைச்சரும் நடிகருமான என்.டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்துள்ளார். உங்களுக்கு தெரியுமா ஆச்சி மனோரமா தமிழ்ப் படங்களில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதோடு, பத்மஸ்ரீ, கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளையும் வென்று குவித்தவர், ஆச்சி மனோரமா. இல்லற வாழ்க்கை மனோரமா 1964ஆம் ஆண்டி...