ஒரே வாரத்தில் 44 குழந்தைகளுக்கு கொரோனா?! 4 வது அலை தொடக்கமா? ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!
ஒரே வாரத்தில் 44 குழந்தைகளுக்கு கொரோனா?! 4 வது அலை தொடக்கமா? ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை!! இந்தியாவில் கொரோனா 3 வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் பள்ளி சென்று கல்வி கற்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவில் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகம் பதிவாகி வருகிறது. ஒரே வாரத்தில் சுமார் 44 குழந்தைகள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நொய்டாவில் தற்போது 167 பேர் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதில் 26.3 % குழந்தைகள் எனத் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் ஒன்றாக வகுப்பறைகளில் அருகருகே அமர்ந்து படிக்கும் சூழலால் தான் இந்த பாதிப்பு உருவாகி இருக்கலாமா என்ற கோணத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழல் தொடர்வது மாணவர்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு...