Posts

Showing posts with the label # | #Started | #Casting | #Election

\'யாருக்கு வெற்றி...\' தொடங்கியது நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

Image
\'யாருக்கு வெற்றி...\' தொடங்கியது நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை! கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை சென்னையில் துவங்கியது. இத்தேர்தலில் நாசர் தலைமையிலான அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும் போட்டியிட்டது. தலைவர், 2 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் பதிவான சுமார் 2,500 வாக்குகளில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தன.   தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்திக்கும் போட்டியிட்டிருந்தனர். அதேபோல் எதிரணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜும், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்தும் போட்டியிட்டிருந்தனர். பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கம் தனியார் வங்கி லாக்கரில் சீலிடப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கியிலிருந்து எடுத்துவரப்பட்ட வாக்குப்பெட்டிகள் குட் ஷெப்பர்ட் பள்ளியில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் எண்ணப்பட்டு வருகிறது.