Posts

Showing posts with the label #Results | #Released | #Tomorrow | #Result

11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது! ரிசல்ட்டை எப்படி தெரிந்துகொள்வது!1357593579

Image
11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது! ரிசல்ட்டை எப்படி தெரிந்துகொள்வது! தமிழகத்தில், 2022 மே  மாதத்தில் நடைபெற்ற 11ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்கள் வாயிலாக காணலாம். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சமர்ப்பித்து உள்நுழைந்து முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும், தாங்கள் பயின்ற பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கூடுதலாக, மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த கைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 ஆம் தேதி தொடங்கியது.  3119 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 8,83,882 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் தேர்வெழுதினர் என்பது குறிப்பிடதக்கது.