Posts

Showing posts with the label #WeatherForecast | #Todayweather | #todayraine

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Image
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கடந்த 24 மணிநேரத்தில் கொடைக்கானலில் 8 செ.மீ., ராஜபாளையம், பிளவக்கல் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் அரைமணி நேரம் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் காணப்பட்டது. திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் கடந்த சிலநாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் பிற்பகலில் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்று வீசியது. பின்னர் அரை மண