தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கடந்த 24 மணிநேரத்தில் கொடைக்கானலில் 8 செ.மீ., ராஜபாளையம், பிளவக்கல் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் அரைமணி நேரம் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் காணப்பட்டது.

திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் கடந்த சிலநாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் பிற்பகலில் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்று வீசியது.

பின்னர் அரை மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதேபோல் வாணியம்பாடி நகர பகுதியிலும் கனமழை நீடித்தது. இதனால் நியூ டவுன் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் ஓடியது. மழைநீர் சாலையில் சென்றதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. திடீர் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் உருவானது. மழை பெய்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

10 comptes dA copy co inspirants sur Instagram

Chakra Colors And Meanings A Handy Guide On The Ins And Outs Of Your Body s Energy Centers

God Of War 3 wallpaper by musy2 #Wallpaper