Posts

Showing posts with the label #Months | #Marriage | #Congratulations

திருமணமான இரண்டே மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ஆலியா பட் - குவியும் வாழ்த்துக்கள்284184476

Image
திருமணமான இரண்டே மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ஆலியா பட் - குவியும் வாழ்த்துக்கள் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஆலியா பட், விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டு வந்தது. தற்போது அது உறுதியாகி உள்ளது. நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். மருத்துவமனையில் செக் அப்புக்கு சென்றபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஆலியா பட் "எங்களுக்கு குழந்தை வரப்போகிறது" என குறிப்பிட்டு இரண்டு சிங்கங்கள் அதன் குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர...