நாகினியாக மாறிய மூதாட்டி - திருமண நிகழ்ச்சியில் பேரனுடன் லூட்டி அடித்த பாட்டி.. வைரல் வீடியோ திருமணம் என்றாலே கொண்டாட்டங்களுக்கு எல்லையிருக்காது. வீடு முழுவதும் சொந்த பந்தங்கள் என ஒரே கூட்டமாகவும், சந்தோசமாகவும் களைக்கட்டியிருக்கும். ஒரு புறம் திருமண சம்பிரதாயங்கள் நடைபெற்றால் மறுபுறம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு, நடனம் என திளைத்திருப்பார்கள். அப்படி ஒரு திருமணத்தில் எடுத்த நாகிி நடன வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திருமண நிகழ்வின் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அனைவரும் நடனம் ஆடுவார்கள். இந்தியாவில் தற்போது திருமண சீசன் என்பதால் திருமணத்தில் எடுக்கப்பட்ட பல வேடிக்கையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் ஏராளமாக பகிரப்பட்டு வருகின்றன. தற்போது நாம் பார்க்கவிருக்கும் வைரல் வீடியோவை பார்த்தால் நீங்களே துள்ளி குதித்து சிரிப்பீர்கள் பாருங்கள். இப்போது நடைபெறும் அணைத்து கல்யாணத்திலும் பாட்டு, நடனம், என அனைவரும் கவலைகளை மறந்து ஏன் தங்களது வயதை மறந்தும் என்ஜாய் செய்கிறார்கள். குறிப்பாக தற்போதெல்லாம் 'நாகின்' நடனத்தின் மீது அனைவருக்கும் ஒரு ஆர்வம் உள்ளத...