நாகினியாக மாறிய மூதாட்டி - திருமண நிகழ்ச்சியில் பேரனுடன் லூட்டி அடித்த பாட்டி.. வைரல் வீடியோ1624465787
நாகினியாக மாறிய மூதாட்டி - திருமண நிகழ்ச்சியில் பேரனுடன் லூட்டி அடித்த பாட்டி.. வைரல் வீடியோ
திருமணம் என்றாலே கொண்டாட்டங்களுக்கு எல்லையிருக்காது. வீடு முழுவதும் சொந்த பந்தங்கள் என ஒரே கூட்டமாகவும், சந்தோசமாகவும் களைக்கட்டியிருக்கும். ஒரு புறம் திருமண சம்பிரதாயங்கள் நடைபெற்றால் மறுபுறம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு, நடனம் என திளைத்திருப்பார்கள். அப்படி ஒரு திருமணத்தில் எடுத்த நாகிி நடன வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திருமண நிகழ்வின் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அனைவரும் நடனம் ஆடுவார்கள். இந்தியாவில் தற்போது திருமண சீசன் என்பதால் திருமணத்தில் எடுக்கப்பட்ட பல வேடிக்கையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் ஏராளமாக பகிரப்பட்டு வருகின்றன. தற்போது நாம் பார்க்கவிருக்கும் வைரல் வீடியோவை பார்த்தால் நீங்களே துள்ளி குதித்து சிரிப்பீர்கள் பாருங்கள்.
இப்போது நடைபெறும் அணைத்து கல்யாணத்திலும் பாட்டு, நடனம், என அனைவரும் கவலைகளை மறந்து ஏன் தங்களது வயதை மறந்தும் என்ஜாய் செய்கிறார்கள். குறிப்பாக தற்போதெல்லாம் 'நாகின்' நடனத்தின் மீது அனைவருக்கும் ஒரு ஆர்வம் உள்ளது என்றே கூறலாம். ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் வைரலான வீடியோவில் பாம்பு மிகவும் வயதானது ஆகும். ஆம், வைரலாகி வரும் இந்த வீடியோவில் வயதான பாட்டி ஒருவர் பாம்பாக மாறி தனது பேரனுடன் சரிக்கு சரியாக நடனமாடியுள்ளார். தற்போது இந்த பாட்டி, பேரனின் நாகின் நடன வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில், பேரன் முதலில் தனது கைக்குட்டையின் ஒரு முனையை கழுத்தில் சுற்றி போட்டு மறு முனையை கைகளால் மகுடிபோல் பிடித்து ஊதுவது போல் நடனமாட தொடங்குகிறார். இதை பார்த்த அவரது பாட்டி பாம்பாக மாறி பேரனுடன் நாகினி நடனம் ஆட தொடங்குகிறார். இந்த வயதிலும் இவர் ஆடும் அற்புத நடனத்தை காண கூட்டம் கூடியது. இவரின் இந்த பாம்பு நடனத்தைப் பார்த்து மக்கள் சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்கின்றனர்.
யூடியூபில் பகிரப்பட்டுள்ள இந்த பாட்டி மற்றும் பேரனின் நாகின் நடன வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இந்த விடீயோவிற்கு பலர் வேடிக்கையான கருத்துக்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த வயதிலும் அவர் காட்டிய நடன அசைவுகள் அற்புதம் எனவும், முதியவர்கள் அடிக்கடி முதுகு மற்றும் முழங்கால் வலி என்று சொல்லத் தொடங்கும் வயதில் இந்த பாட்டி இவ்வளவு சுறுசுறுப்பாக நடனமாடுவது பாராட்டுக்குரியது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment