பேரறிவாளனுக்கு திருமணம்!! ஏற்பாடுகள் தடபுடல்!!1981491050
பேரறிவாளனுக்கு திருமணம்!! ஏற்பாடுகள் தடபுடல்!! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது. அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்நிலையில் பேரறிவாளனின் விடுதலையை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், அரசியல் கட்சியினர் இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர். இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான ராபர்ட் பயாஸ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று அவரை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கும் நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்றும், பேரறிவாளனுக்கு பெண் பார்க்க தொடங்கி உள்ளோம் என்றும், விரைவில் அவரது திருமணம் குறித்த அறிவிப்பு வரும் எனவும் கூறினார்.