ஒரே வாரத்தில் 44 குழந்தைகளுக்கு கொரோனா?! 4 வது அலை தொடக்கமா? ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!


ஒரே வாரத்தில் 44 குழந்தைகளுக்கு கொரோனா?! 4 வது அலை தொடக்கமா? ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!


இந்தியாவில்  கொரோனா 3 வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் பள்ளி சென்று கல்வி கற்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில்  நொய்டாவில் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு  கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகம் பதிவாகி வருகிறது. ஒரே வாரத்தில் சுமார்  44 குழந்தைகள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நொய்டாவில் தற்போது 167  பேர் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதில் 26.3 % குழந்தைகள் எனத் தெரிவித்துள்ளது. 


பள்ளிகளில் மாணவர்கள் ஒன்றாக வகுப்பறைகளில் அருகருகே அமர்ந்து படிக்கும் சூழலால் தான் இந்த பாதிப்பு உருவாகி இருக்கலாமா என்ற கோணத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழல் தொடர்வது மாணவர்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.மாணவர்கள்  கல்வியுடன் சேர்த்து, மன நலன், சமூக நலன்களும் பாதிக்கப்படும். 12-15 வயதினருக்கான தடுப்பூசி திட்டத்தை விரைவில் மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். அதே நேரத்தில் 12 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் பள்ளிகளில் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்  தொடர்ந்து பின்பற்றப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 


இந்தியா முழுவதும் புதிதாக 949 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. நாட்டில் தற்போது 11191 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத்  மாநிலங்களில் மீண்டும் கொரோனா  எண்ணிக்கை உயர்ந்து வருவதால், மத்திய மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இந்தியாவை பொறுத்தவரை ஜூனில் கொரோனா 4 வது அலை ஏற்படலாம் என ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தலைநகர் டெல்லியில்  பேரிடர் மேம்பாட்டு ஆணையம் அடுத்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் கொரோனா பரவல் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா ஆபத்துக்கள்  இன்னும் முழுமையாக விலகவில்லை எனவும் இதனால் பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்படவும் அறிவுறுத்தியுள்ளது. 

Comments

Popular posts from this blog