பேரறிவாளன் திருமணத்திற்கு தடல்புடல் ஏற்பாடு - அற்புதம்மாள் சொன்ன ஹேப்பி நியூஸ்!


பேரறிவாளன் திருமணத்திற்கு தடல்புடல் ஏற்பாடு - அற்புதம்மாள் சொன்ன ஹேப்பி நியூஸ்!


திரைப்பட ஷூட்டிங்காக சேலத்தில் தங்கியுள்ள திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினைபேரறிவாளன்மற்றும் அவரது தாயார்அற்புதம்மாள்நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, இயக்குனர் மாரி செல்வராஜையும் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள் பேசியதாவது:-
"பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறோம். அதன்படி தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் நேரில் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்து வருகிறோம்.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனால் சேலம் வந்து தற்போது அவரை நேரில் சந்தித்து எங்களது நன்றியை தெரிவித்தோம். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜிக்கும் நன்றி தெரிவித்தோம். என்றார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை; வேகமாக நிரம்பும் Mettur Dam; விவசாயிகள் மகிழ்ச்சி!


தொடர்ந்து பேசிய அற்புதம்மாள், சாமானியர்களின் குரல் மேடை ஏறாது என்பது போல தனது மகன் குற்றம் செய்யவில்லை என சட்டத்தின் படி நான் குரல் கொடுத்தும் எடுபடவில்லை. 31 ஆண்டுகள் கழித்து தற்போது தான் விடுதலை கிடைத்துள்ளது. 19 வயதில் சிறைக்குச் சென்ற மகன் 31 ஆண்டுகள் கழித்து தற்போது சுதந்திர மனிதனாக வெளியே வந்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சிறையில் வாடும் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியவர் இனி பேரறிவாளனுக்கு குடும்பம் அமைத்து தரவேண்டும் என்ற ஏக்கம் உள்ளது. எனவே அவருக்கு ஏற்ற பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்ய தயாராக இருக்கிறோம் அதற்காக பெண் தேட தொடங்கி உள்ளோம்” என்று அற்புதம்மாள் கூறினார்.

அதன் பின்னர் பேரறிவாளன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
"19 வயதில் சிறைக்குச் சென்ற நான் 31 ஆண்டுகள் கழித்து தற்போது வெளி உலகை காண்கிறேன். இது புது உலகமாக தெரிகிறது. சிறையில் தனக்கு எந்தவித டார்ச்சரும் நடக்கவில்லை. அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர். சிறையில் நான் சிறைவாசிகளுக்கு பாடம் கற்பித்துக் கொடுத்தேன்.
ஜூன் 12ந் தேதிக்கு முன்பே மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு!

சாமானிய மனிதன் ஒரு வழக்கில் சிக்கிக் கொண்டால் எத்தனை துன்பங்களை சந்திக்க முடியும், எத்தனை வலிகளை சுமக்க முடியும் என்பதை இந்த தண்டனை மூலம் தான் தெரிந்து கொண்டேன்ஒரு மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவே இறுதியானது, அது ஆளுநரை கட்டுப்படுத்தும் என்பதை தீர்ப்பு ஆணித்தரமாக கூறியுள்ளது .எனவே இந்த தீர்ப்பு மற்றவர்களுக்கும் உதவியாக அமையும்” என்று கூறினார்.

Comments

Popular posts from this blog