விஜய் பழைய மாதிரி இல்ல.. வேற லெவலில் மாறிட்டார்.. இயக்குனர் பேரரசு!


விஜய் பழைய மாதிரி இல்ல.. வேற லெவலில் மாறிட்டார்.. இயக்குனர் பேரரசு!


தொடர்ந்து கமர்சியல் வெற்றி படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் பெயரெடுத்தவர் இயக்குனர் பேரரசு மற்ற இயக்குனர்களிடம் இருந்து சற்று வித்தியாசமாக யோசித்து தன்னுடைய ஒவ்வொரு படங்களின் தலைப்புகளை தமிழகத்தில் உள்ள மிகப் பிரபலமான ஊர்களின் பெயர்களை தலைப்புகளாக வைத்து வந்தார் அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திருப்பாச்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்

முதல் படத்திலேயே சிக்சர் அடித்தார். முதல் படத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து இயக்கினார் யவிஜய் அதுவரை சாப்ட்டானா கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் திருப்பாச்சி படத்தில் ஆக்ஷனிலும் காமெடியிலும் கலக்கி இருப்பார். பேரரசு மற்றும் விஜய் இணைந்த முதல் திரைப்படமே பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து இந்த கூட்டணி உடனடியாக இரண்டாவது முறையாக இணைந்து திரைப்படம் சிவகாசி.

திருப்பாச்சி கிராமத்தை கதைக் களத்தில் வெளியானதை தொடர்ந்து சிவகாசி படத்தை முழுக்க முழுக்க சிட்டி பேசில் எடுத்திருப்பார் . பேரரசு விஜய் வைத்து இயக்கிய முதல் இரண்டு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற சூழலில் அதை தொடர்ந்து அஜித்,விஜயகாந்த், பரத் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வந்தவருக்கு கடைசியாக வெளியான சில படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டார்

இப்பொழுது மீண்டும் கம்பேக் கைகொடுக்க காத்துக்கொண்டிருக்கும் பேரரசு விஜய்யை வைத்து இயக்க தவம் கிடக்கிறார். விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க ரெடியாக இருப்பதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதற்காக விஜயை சந்தித்து கதையை கூறியுள்ளதாகவும் விஜய்க்கு அந்த கதை பிடித்து விட்டதாகவும் மிக விரைவிலேயே இருவரும் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பேரரசு திருப்பாச்சி,சிவகாசி விஜய் இப்போ இல்லை. அவருடைய மார்க்கெட் பல மடங்கு கூடிப் போச்சு. விஜயை வைத்து படம் இயக்க நான் தயாராகத்தான் உள்ளேன் ஆனால் அவர் தான் யோசிக்க வேண்டும். கதையெல்லாம் அவரிடம் கூறியாச்சி அவருடைய ஒப்புதலுக்காக காத்திருக்கிறேன் என பேசியுள்ளார்.

Comments

Popular posts from this blog