தீ விபத்தில் சிக்கிய பிரபல இளம் நடிகை... படப்பிடிப்பு தளத்தில் விபரீதம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள் படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல இளம் நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2018-ல் வெளியான ‘சின்சியர்லி யுவர்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷர்மீன் அகீ (27). வங்கதேசத்தைச் சேர்ந்த இவர், ‘டாக்கா’, ‘பைஷே ஸ்ரபோன்’ மற்றும் ‘பாண்டினி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் வங்கதேச சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் தற்போது இவர் புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மிர்பூர் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது இவர் இருந்த மேக்கப் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கிய அவருக்கு கைகள், கால்கள், மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டப் படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்தபோது 35 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஷேக் ஹசீனா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்ன் அண்ட் பிளாஸ்டிக் ச...