டெல்லியில் கடும் நில அதிர்வு.. நேபாள நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழப்பு!


டெல்லியில் கடும் நில அதிர்வு.. நேபாள நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழப்பு!


டெல்லி மற்றும் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவு 6.3ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் 10.கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று காலை நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த சம்பவத்தால் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8 ஆயிரத்து 964 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவமே அடங்காத நிலையில், தற்போது மேலும் ஒரு நிலநடுக்கம் ஏறபட்டு உயிர் பலியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog