36 செயற்கைகோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!!1812374488
36 செயற்கைகோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களுடன், ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து அதிகாலை 12.07 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் சுமார் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும்.
வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
ஒன்வெப் நிறுவனமானது உலக நாடுகளுக்கு அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், இந்த 36 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
Comments
Post a Comment