2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் மழை!!242459837
2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் மழை!!
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் பல பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், வானகரம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.ஆலந்தூர், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, ஆதம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
Comments
Post a Comment