sbi card : வாடிக்கையாளர்கள் அவசியம் இந்த தகவலை தெரிஞ்சு வச்சிக்கோங்க!
எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள்? உங்களிடம் எஸ்பிஐ டெபிட் கார்டு உள்ளதா? அப்படியென்றால், டெபிட் கார்டுகளை ஃபோன் கால் மூலமாகவும், எஸ்எம்எஸ் மூலமாக பிளாக் செய்து கொள்வதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி வழங்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கார்டு பிளாக் செய்ய வேண்டிய தேவை ஏன் ஏற்படப் போகிறது என்ற கேள்வி எழுகிறதா? ஒருவேளை உங்களது டெபிட் கார்டை நீங்கள் தொலைத்து விட்டாலோ அல்லது யாரேனும் அதை உங்களிடம் இருந்து திருடி விட்டாலோ, அதுகுறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த டெபிட் கார்டை பிளாக் செய்வதன் மூலமாக அதன் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்கி விட முடியும்.
Comments
Post a Comment