பயணிகள் கவனிக்கவும் பிரச்னை முடிந்தது - சூர்யா பாலகுமாரன்!


பயணிகள் கவனிக்கவும் பிரச்னை முடிந்தது - சூர்யா பாலகுமாரன்!


பயணிகள் கவனிக்கவும் டைட்டில் சர்ச்சை முடிவுக்கு வந்திருப்பதாக மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலக்குமாரன் தெரிவித்துள்ளார்.

சக்திவேல் இயக்கத்தில் விதார்த், லட்சுமிபிரியா சந்திரமவுலி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’பயணிகள் கவனிக்கவும்’. ஏப்ரல் 29-ஆம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் நிலையில், இந்தப் படத்திற்கு எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

அதில், “பயணிகள் கவனிக்கவும் என்பது எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு மிகச்சிறந்த புத்தகம். It is easily one of his best. Airport கதைக்களம். விருது வாங்கிய புத்தகம். அப்பாவின் உழைப்பு, ஒவ்வொரு நாளும் விமான நிலையம் சென்று அங்குள்ளவர்களிடம் பேசி பழகி உருவாக்கிய படைப்பு. இதைப் படமாக்க வேண்டும்மென்பது எனது கனவு.

அப்பா பாலகுமாரன் எழுதிய அனைத்து படைப்புகளின் சம்மந்தமான காப்பிரைட்ஸ், சட்டப்படி என்னுடைய பொறுப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளேன். அது நாளிதழிலும் செய்தியாக வந்தது. என்னுடைய சுய நினைவவுக்குத் தெரிந்து இந்த டைட்டிலை எங்கள் படத்திற்கு வைத்துக் கொள்ளலாமா என்று என்னிடமோ எங்கள் குடும்பத்தாரிடமோ யாரும் கேட்கவில்லை. ஒரு கர்டஸி கால்? ஒரு கடிதம்? சிரித்த முகத்துடன் ஒரு விண்ணப்பம்? எதுவும் இல்லை. மிகவும் நெருக்கமான பலர் இதில் சம்மந்தப்பட்டிருந்தாலும் என்னிடம் இதைப்பற்றி பேசவில்லை.

இதைத் தொடர்ந்து ஆஹா ஓ.டி.டி-க்கும், ஆல் இன் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு எங்கள் குடும்ப நண்பரும் வழக்கறிஞருமான திரு விஜயன் சுப்ரமண்யம் அவர்கள் மூலம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

மீண்டும் ஒளிபரப்பை தொடங்கிய விஜய் டிவி-யின் வைதேகி காத்திருந்தாள் தொடர்!

இதையடுத்து, ’இன்று காலை இயக்குனர் திரு. SP சக்திவேல் மற்றும் தயாரிப்பாளர் திரு. விஜய் ராகவேந்திரா அவர்கள் எங்கள் வீடு தேடி வந்து என்னிடமும் என் தாயாரிடமும் தாங்கள் அறியாமல் இதை செய்து விட்டதாகக் கூறி தன்நிலை விளக்கம் தெரிவித்தார்கள். தாயாரிடம் மன்னிப்பும் கேட்டார்கள். இதை அடுத்து சுமூகமாக பேசி முடித்துக்கொண்டோம்’ என தற்போது தெரிவித்துள்ளார் சூர்யா பாலக்குமாரன்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Comments

Popular posts from this blog