மீண்டும் ஒளிபரப்பை தொடங்கிய விஜய் டிவி-யின் வைதேகி காத்திருந்தாள் தொடர்!


மீண்டும் ஒளிபரப்பை தொடங்கிய விஜய் டிவி-யின் வைதேகி காத்திருந்தாள் தொடர்!


விஜய் டிவி-யில் பாதியில் நிறுத்தப்பட்ட வைதேகி காத்திருந்தாள் சீரியல் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, மக்களின் மனதில் நிரந்தரமாக நிற்கும். சீரியல்களைப் பொறுத்தவரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் வித்தியாச கதைகளத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. வரவேற்பைப் பெறாத சீரியல்களின் ஒளிபரப்பை நிறுத்தவும் சேனல் நிர்வாகம் தயங்கியதில்லை.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவி-யில் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற சீரியல் தனது ஒளிபரப்பை தொடங்கியது. இதில் பிரஜின் கதாநாயகனாகவும், சரண்யா கதாநாயகியாகவும் நடித்தனர். சீரியல் தொடங்கி சில வாரத்திலேயே வைதேகி காத்திருந்தாள் சீரியலில் இருந்து திடீரென விலகினார் பிரஜின்.

சினிமா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் சீரியலுக்கு தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்பே கமிட்டான படங்கள் என்றாலும் சீரியலையும், சினிமாவையும் பேலன்ஸ் செய்யலாம் என்ற நம்பிக்கையில் சீரியலில் நடிக்க ஓகே சொன்னதாகவும், ஆனால் நாளடைவில் சிரமத்துக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆகையால் சேனல் நிர்வாகத்துடன் சுமூகமாக பேசி, தொடரிலிருந்து வெளியேறியதாகவும் குறிப்பிட்டார்.

ரஜினிக்காக எழுதப்பட்ட விஜயகாந்தின் அம்மன் கோவில் கிழக்காலே!

பின்னர் வைதேகி காத்திருந்தாள் தொடரில் பிரஜினுக்கு பதிலாக நடிகர் முன்னா ஒப்பந்தமானார். அவர் ஏற்கனவே விஜய் டிவி-யின் ராஜபார்வை சீரியலில் நடித்திருந்தார். வைதேகி காத்திருந்தாள் சீரியலில் முன்னா நடிக்க ஆரம்பித்து ஒரு வாரமே ஆன நிலையில், அந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது. ஆரம்பித்த வேகத்திலேயே வைதேகி காத்திருந்தாள் ஏன் நிறுத்தப்பட்டது எனக் காரணம் எழுந்த நிலையில், மிகக் குறைந்த டி.ஆர்.பி-யே அதற்குக் காரணம் என சொல்லப்பட்டது.

பிக் பாஸ் தாமரைச் செல்வி வீட்டிற்கு சென்ற பிரபலம் - லைக்ஸை அள்ளும் புகைப்படம்!

இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வைதேகி காத்திருந்தாள் ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. மீண்டும் விஜய் டிவி-யிலா என்றால், அது தான் இல்லை. அந்தத் தொடர் நிறுத்தப்பட்டு 69 நாட்கள் கழிந்த நிலையில் அதுவரை எடுக்கப்பட்டு டிவி-யில் ஒளிபரப்பாகமல், மீதமிருந்த காட்சிகளை ஹாட்ஸ்டாரில் வெளியிட்டுள்ளனர் சேனல் தரப்பினர். தற்போது அதனை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Comments

Popular posts from this blog