உலகிற்கு அடுத்து ஆபத்து - சீனாவில் மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்!


உலகிற்கு அடுத்து ஆபத்து - சீனாவில் மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்!


சீனாவில் காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகளுடன் 4 வயது சிறுவனுக்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

அண்டை நாடான சீனாவின், ஹெனான் மாகாணத்தில், 4 வயது சிறுவனுக்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவைக் காய்ச்சல் பரவி இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.

இது தொடர்பாக சீனாவின் சுகாதார ஆணைய அதிகாரிகள் தெரிவித்தாவது:
‘எச் 3 என் 8’ வைரஸ் மாறுபாடு பறவைகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக எதுவும் பதிவாகவில்லை. ஆரம்ப ஆய்வுகளின்படி இந்த மாறுபாடு இன்னும் மனிதர்களை திரும்ப பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. பெரிய அளவிலான தொற்று நோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளது. எச்3 என்8 பறவைக் காய்ச்சல் வைரஸ் மக்களிடையே பரவுதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தடுப்பூசி போடாதவர்களால் மற்றவர்களுக்கு ஆபத்து: ஆய்வில் ஷாக் நியூஸ்!
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் பரவிய கோவிட்-19 தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தொற்று இதுவரை முடிவுக்கு வராத நிலையில், தற்போது மனிதருக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது, அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog