பழுதான தனியார் கல்லூரி பேருந்தை மாணவர்களை வைத்தே தள்ளிச் சென்ற சம்பவம்... வீடியோ வைரலானதால் பரபரப்பு
பழுதான தனியார் கல்லூரி பேருந்தை மாணவர்களை வைத்தே தள்ளிச் சென்ற சம்பவம்... வீடியோ வைரலானதால் பரபரப்பு
கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மிட்டப்பள்ளி என்ற பகுதியில் பி.எஸ்.வி என்ற தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி,திருப்பத்தூர்,ராணிபேட்டை,வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவினர் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எளிதாக சென்று வர கல்லூரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று காலை இந்த கல்லூரியின் பேருந்து காவேரிப்பட்டணம் பகுதியிலிருந்து கல்லூரிக்கு மாணவர்களை அழைத்து சென்று கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணகிரி செல்லும் வழியில் திம்மாபுரம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பேருந்து பழுதாகி திடீரென நின்று விட்டது.
ALSO READ | விஜய்சேதுபதியின் ‘96’ பட பாணியில் சந்தித்த காவலர்கள்.. கண்கலங்கி, கட்டிப்பிடித்து.. நெகிழ்ச்சி சம்பவம்
இதனையடுத்து பேருந்தில் பயணித்த ஆசிரியர்கள் அதே பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களை வைத்தே அந்த பேருந்தை தேசிய நெடுஞ்சாலையில் தள்ளிக்கொண்டே சென்றனர். நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லக்கூடிய சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துகள் நடக்கும் பகுதியாக திம்மாபுரம் பகுதி உள்ளது. அந்த பகுதியில் ஆபத்தான முறையில் மாணவர்களை வைத்து பழுதான பேருந்தை தள்ளி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரியில் பழுதான கல்லூரி பேருந்தை மாணவர்களை வைத்தே பேருத்தை நெடுஞ்சாலையில் தள்ள வைத்த சம்பவம் கிருஷ்ணகிரி சுற்று வட்டாரபகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி செய்தியாளர்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment