பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்.
பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்.
பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். பிரபல நடிகர்களாக இருக்கும் பலரும் வறுமையின் கொடூரத்தில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
Chennai, First Published Apr 29, 2022, 5:46 PM IST
அன்னூர் தெலுங்குபாளையத்தை சார்ந்த ரங்கம்மாள் பாட்டி எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார். வடிவேலுவின் பிரபல காமெடிகளில் ஒன்றான "ந்தா அந்த நாயைக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ" என்று சொல்லும் ரங்கம்மா பாட்டி நடிப்பின் மூலம் பாராட்டுப் பெற்றவர். தள்ளாத வயதிலும் டைலாக்கை மறக்காமல் பேசும்திறன் கொண்டவர் ரெங்கம்மா பாட்டி.
500க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் தோன்றியுள்ளார். மிக வயது முதிர்ந்த இவருக்கு போதுமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த 2018 -ம் ஆண்டு மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று பிழைப்பை நடத்தி வந்த இவரை கடந்த யூட்யூப்பர் போட்ட பதிவை அடுத்து நடிகர் சங்கம் உதவி தொகையாக ரூ. 5000 த்தை ரங்கம்மாள் பாட்டிக்கு வழங்கியது.
பின்னர் மிகுந்த சிரமத்தில் இருந்த இவர் தனது சொந்த திரும்பினார். உடல்நிலை மிகவும் குன்றிய நிலையில் அவ்வப்போது தனது நடிப்பை காணொளியில் பார்த்து ரசித்து வரும் ரங்கம்மா பாட்டி சமீபத்தில் சோசியல் மீடியா ஒன்றிற்கு கொடுத்த பேட்டி வைரலானது.
இந்நிலையில் மீண்டும் நடிக்க தயாராகி வருவதாக கூறியிருந்த ரங்கம்மாள் பாட்டி சொந்த ஊருக்கு திரும்பிய சில மாதங்களில் உயிரிழந்து விட்டார். பிரபல நடிகர்களாக இருக்கும் பலரும் வறுமையின் கொடூரத்தில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
Last Updated Apr 29, 2022, 5:58 PM IST
Comments
Post a Comment