சும்மாவே லந்து கொடுப்பார்…! ரிப்போர்ட்டர் அப்டி கேட்டதற்கு நச்சுன்னு பதில் சொன்ன மக்கள் சேதுபதி..
சும்மாவே லந்து கொடுப்பார்…! ரிப்போர்ட்டர் அப்டி கேட்டதற்கு நச்சுன்னு பதில் சொன்ன மக்கள் சேதுபதி..
மக்கள் சேதுபதி, மக்கள் நாயகன் என அனைவராலும் பாசத்துடன் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி. மக்களின் அன்பை பெரும்பான்மையாக பெற்றவர். இவர் வந்தாலே நம்மலில் ஒருத்தர் போல சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்.
இவரின் நடிப்பால் தெலுங்கு மற்றும் இந்தி பட உலகிலும் பல வாய்ப்புகள் குவிகிறது. நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே மினிமம் கேரன்டி. கட்டாயமாக அந்த படத்தை ரசிகர்கள் வெற்றி பெற செய்து விடுவார்கள் என்று இருக்கும் நிலையில் ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 96 படத்தில் திரிஷாக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்து இளசுகள் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட படம் தான் இது. அந்த அளவுக்கு காதல் காவியமான படம்.
இப்படி இருக்கையில் ஒரு பிரஸ் மீட்டில் விஜய் சேதுபதியிடம் திரிஷாவை பற்றி கேட்டதற்கு சின்ன வயதிலே இருந்து திரிஷான பயம் என கூறியிருந்தார். மேலும் ஹோம் ஒர்க் பண்ணலனா அம்மா திரிஷா சொல்லி தான் பயம் காட்டுவார் என கிண்டலாக கூறினார். இவர் இப்படி கூறியதற்கு காரணம் ஒரு ரிப்போர்ட்டர் விஜய்சேதுபதிக்கு நீங்கதான் சீனியர் நடிப்பில் உங்க அனுபவம் பற்றி? என திரிஷாவிடம் கேட்டதுதான்.
Comments
Post a Comment