அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... படம் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?


அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... படம் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?


237 கோடி மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அவதார். ரீ ரிலீசிற்காக 9 மில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் அதுவே பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்பட்டது. இந்த படம் உலகம் முழுவதும் 2.847 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இந்த படம் 2010 ம் ஆண்டு ஆஸ்கர் விழாவில் அதிகபட்சம் 9 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன் ஆகிய 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் 2 படத்தை இயக்கி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன். இந்த படத்தை 20th Century Studios தயாரித்துள்ளது. 2014 ம் ஆண்டே அவதார் 2 படத்தை எடுக்க திட்டமிட்டார் ஜேம்ஸ் கேரூன். ஆனால் 2017 ல் தான் இந்த படத்தை துவக்கினார். அவதார் 2 படத்துடன் சேர்ந்து அவதார் 3 படத்தையும் இயக்கி உள்ளார். 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.

தற்போது அவதார் 2 படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிக்கப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவதார் 2 படம் வரும் டிசம்பர் 16ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. உலகம் முழுக்க 160 மொழிகளில் அவதார் 2 ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவதார் 2 படம் 250 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

அவதார் 3 படம் பைனான்ஸ் தட்டுப்பாடு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாம். அவதார் 3 மட்டுமல்ல அவதார் 4, அவதார் 5 பாகங்கள் வரை எடுக்க ஜேம்ஸ் கேமரூன் திட்டமிட்டு வைத்துள்ளார். அவதார் படத்தை போலவே அவதார் 2 படமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று, வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog