முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சிகிச்சைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!


முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சிகிச்சைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!


தற்போதைய காலகட்டத்தில் முடி உதிர்தல் அல்லது வழுக்கை உள்ளிட்ட பிரச்சனைகளை நடுத்தர வயதினர் மற்றும் வயதானவர்கள் மட்டுமல்ல இளம் வயதினரும் எதிர்க்கிண்டு வரும் பொதுவான பிரச்சனைகளாக இருந்து வருகிறது.

முடி பிரச்சனைக்கான சிகிச்சையை தொடங்கும் முன் முடி ஏன் அதிகமாக கொட்டுகிறது அல்லது வழுக்கை ஏன் ஏற்படுகிறது என்பதற்கான முக்கிய காரணத்தை கண்டறிவது முக்கியம். உணவுக் குறைபாடுகள், பரம்பரை காரணம், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல அடிப்படைக் காரணங்கள் முடி உதிர்தலுக்கு பின்னால் இருப்பதால், நீங்கள் எந்த சிகிச்சையை தொடங்கும் முன்பு ஒரு தோல் மருத்துவரை அணுகுவது உதவியாக இருக்கும்.

ஏனென்றால் ஒரு சிறந்த தோல் மருத்துவர் முடி உதிர்தல் அல்லது வழுக்கைக்கான மூல காரணத்தை கண்டறிந்து, அந்த குறிப்பிட்ட காரணத்திற்காக சிறப்பு சிகிச்சையை உங்களுக்கு அளிக்க முடியும். முடி உதிர்தல் பிரச்சனைக்கான காரணத்தை பரிசோதிக் ரத்த பரிசோதனைகள், ஸ்கால்ப் பயாப்ஸி மற்றும் புல் டெஸ்ட்கள் உள்ளன. இவற்றின் மூலம் பிரச்சனைக்கான மூல காரணத்தை கண்டுபிடிக்கலாம். முடி உதிர்வை நிறுத்த, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் மூன்று மேம்பட்ட சிகிச்சைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

PRP சிகிச்சை:

முடி உதிர்தலுக்கான PRP (platelet-rich plasma - பிளேட்லெட்ரிச் பிளாஸ்மா) சிகிச்சை என்பது ஒரு நபரின் ரத்தம் எடுக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு மீண்டும் உச்சந்தலையில் செலுத்தப்படும் த்ரீ-ஸ்டெப் மருத்துவ சிகிச்சை ஆகும். இயற்கையான முடி வளர்ச்சியைத் தூண்ட இந்த PRP சிகிச்சை உதவுகிறது மற்றும் மயிர்க்கால்களுக்கு ரத்த விநியோகத்தை அதிகரிப்பதன் மூலம் மற்றும் முடி தண்டின் தடிமனை அதிகரிக்க செய்வதன் மூலமும் முடியை ஆரோக்கியமாக பராமரிக்கிறது.

கோடைகால அழகுப்பராமரிப்பில் சந்தனம்... சருமத்தை கூலாக்கும் 4 வகையான ஃபேஸ் பேக்குகள்

GFC (Growth Factor Concentrate) சிகிச்சை:

இது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளால் முடி இழந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சைகளில் ஒன்றாகும். இந்த சிகிச்சையானது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளிலிருந்து செயல்படுத்தப்பட்ட வளர்ச்சி காரணிகளை (activated growth factors) பயன்படுத்துகிறது. பின் சிகிச்சை பெறும் நபரின் சொந்த வளர்ச்சி காரணிகளை (own growth factors) உச்சந்தலையில் செலுத்துகிறது. Growth Factor Concentrate-ஆனது முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலையில் செலுத்தப்பட்டு, முடி வளர்ச்சியை மீண்டும் தூண்டுகிறது.

ஸ்டெம்ஸ் செல்கள் வெவ்வேறு செல் கோடுகளாக உருவாகும் திறன் கொண்ட செல்கள் மற்றும் இயற்கையான வளர்ச்சி மற்றும் குணப்படுத்துதலில் ஒரு ஒருங்கிணைந்த பாத்திரத்தை வகிக்கின்றன. இவை குறிப்பிட்ட நபரின் திசுக்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வகத்தில் செயலாக்கப்படுகின்றன, அங்கு அவை பிரிக்கப்பட்டு பெருகும். இந்த செல்கள் மீண்டும் உச்சந்தலையின் வழுக்கைப் பகுதிகளில் செலுத்தப்படும்.

ரோபோட்டிக் முடி மாற்று சிகிச்சை (Robotic hair transplant):

இது ஒரு ஆட்டோமேட்டட் முடி மாற்று முறையாகும், இது ரோபோட்டிக் கைகளை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இது பொதுவாக வலியற்ற செயல்முறையாகும், இதில் எந்த அசௌகரியமும் இருக்காது. வழுக்கை, முன் முடி குறைதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை சிறந்தது. இந்த செயல்முறையின் சில முக்கிய நன்மைகள், அதன் துல்லியம், வேகம் மற்றும் மயிர்க்கால் சேதத்தின் அபாயத்தைக் குறைத்தல் ஆகியவை ஆகும்.

 

Comments

Popular posts from this blog