வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு... ஆக்சிஸ் வங்கி சூப்பர் திட்டம்
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு... ஆக்சிஸ் வங்கி சூப்பர் திட்டம்
குடும்பத்திற்கு பொருளாதாரம் ஈட்டுவதில் இன்று ஆண்களுக்கு இணையாக பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குடும்ப பொறுப்புகள் அதிகம் உள்ள காரணத்தால் நன்கு படித்தும், திறமை இருந்து பெண்கள் சிலரால் பணிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால் வருமானம் பாதிக்கப்படுவதால், மற்ற சில பொருளாதார பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க - NIA Recruitment 2022 : தேசிய புலனாய்வு முகமை வேலைவாய்ப்பு அறிவிப்பு
இதேபோன்று தொடர்ந்து குடும்ப பணிகள் மட்டுமே செய்யும் பெண்களுக்கு, வேலை என்பது சற்று ரிலாக்சேசனை தருகிறது. இதுபோன்ற பணிகள் இல்லாததால் பெண்கள் மனதளவில் தளர்ச்சி அடைகின்றனர். இந்நிலையில், வேலை பார்க்க விருப்பம் உள்ள வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சூப்பரான திட்டத்தை ஆக்சிஸ் வங்கி கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க - Digital India Corporation Recruitment 2022 : டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இத்திட்டத்தில் இணைவதற்கு பெண்கள் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பெண்களின் திறமைக்கு ஏற்றவாறு ஊதியம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் பேங்க் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் அளவு இவர்களுக்கும் வழங்கப்படும் என்று அவ்வங்கியின் தலைவர் ராஜ்கமல் கூறியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 3000க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக ஆக்சிஸ் பேங்க் தெரிவித்துள்ளது.
பணியில் சேர விருப்பம் உள்ள பெண்களிடம் கம்யூசிகேஷன் ஸ்கில், டீம் வொர்க் போன்ற அம்சங்கள் இருக்க வேண்டும். மொபைல் போன் வைத்திருக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment