திமுகவிற்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும்- அண்ணாமலை சவால்!


திமுகவிற்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும்- அண்ணாமலை சவால்!


திமுக அரசுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "நக்கீரன், ஜீனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் 5000 கோடி ரூபாய் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட உள்ளதாக செய்தி வந்துள்ளது. தனி விமானத்தில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன், உதவியாளர்கள் வின்சென்ட், விஜய் மற்றும் குடும்ப ஆடிட்டர்கள் துபாய்  சென்றுள்ளனர். 5000 கோடி என்பது என்ன மர்மம்? தொடர்ச்சியாக முதல்வர் குடும்பத்தினர் ஏன் துபாய் செல்கிறார்கள் ?துபாய் முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் நிதியா அல்லது கோபாலபுரதிற்கு வர போகும் நிதியா ?

நான் பேசிய அனைத்து விஷயங்களை ஆதார பூர்வமாக சந்தித்து இருக்கிறேன். நான் அதிமுக உறுப்பினர்கள் தூண்டு கோளால் பேசுவது போன்ற அவதூறை பரப்புகிறார்கள். நான் அடுத்த 6 மணி நேரம் பாஜக அலுவலகத்தில் தான் இருப்பேன்.முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். நீங்கள் என்னை இன்று கைது செய்யவில்லை என்றால் மக்களிடம் மாட்டி கொள்ள போகிறீர்கள். உங்களுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யுங்கள். ரூ. 6100 கோடி முதலீட்டில் 70 சதவீதத்தை கேரளாவை சேர்ந்த யூசுப் அலி மட்டும் முதலீடு செய்துள்ளார். 

 

 

Comments

Popular posts from this blog