மாதம் ரூ. 50,000க்கு மேல் பென்சன் கிடைக்கும் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?


மாதம் ரூ. 50,000க்கு மேல் பென்சன் கிடைக்கும் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?


ஓய்வு காலத்தில் மாதம் ரூ. 50,000க்கு மேல் பென்சன் கிடைக்கும் சூப்பரனான பாதுகாப்பான பென்சன் திட்டம் பற்றி தான் பார்க்க போகிறோம். 

பென்சன் என்பது கண்டிப்பாக முதுமை காலத்தில் தேவைப்படும் ஒன்று. தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பென்சன் கிடைக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஆனாலும் தங்கள் ஓய்வு காலத்தில் நிலையான வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திட்டத்தை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். ஓய்வு காலத்தில் நல்ல வருமானத்தை இது உறுதி செய்யும். தேசிய ஓய்வூதிய திட்டம். இந்த திட்டத்தில் மாதம் எப்படி ரூ. 50,000க்கு மேல் பென்சன் பெறுவது என்பது குறித்து தான் பார்க்க போகிறோம்.இந்த தேசிய ஓய்வூதிய திட்டம் 2004ல் தொடங்கப்பட்டது.

Disney plus hotstar சேவையை இலவசமாக வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

இதில் 2 வகையான திட்டங்கள் உள்ளன. அடுக்கு-1 (ஓய்வூதியக் கணக்கு, ) மற்றும் அடுக்கு-2 (தன்னார்வக் கணக்கு). பென்சன் பெற விருப்பம் உள்ளவர்கள் தாமாகவே முன்வந்து இந்த திட்டத்தில் இணையலாம். உங்களின் 65 வயது வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வரி விலக்கும் வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.அதாவது இதில் சேமிப்பை தொடங்கினால் ரூ.2 லட்சம் வருமான வரி விலக்கு பெறலாம்.

இப்போது மாதம், ரூ. 50000 மேல் பென்சன் கிடைக்க என்ன வழி என்பதை பார்க்கலாம். நீங்கள், 21 வயதில் முதலீடு செய்யத் தொடங்கி, மாதம் ரூ.4,500 தொகையை 60 வயது வரை தொடர்ந்து 39 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்.இதன் மூலம் உங்கள் சேமிப்பு ஆண்டுக்கு ரூ.17  லட்சம் . இதற்கு 10% வருமானம் கொடுக்கப்பட்டால், முதிர்வுத் தொகை கோடியை தாண்டும்.  அதாவது, ஓய்வு பெறும்போது, ​​மாதம் ரூ.51,848 ஓய்வூதியமாகப் பெறுவீர்கள்.

SBI update : இந்த தேதிகளில் வங்கிச் சேவை பாதிக்கப்படலாம்.. ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் நோட் பண்ணிக்கோங்க!

இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனிலும் எளிமையாக தொடங்கலாம். அதற்கு https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். new login கொடுத்து அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்ப வேண்டும். மொபைல் எண் OTP மூலம் சரிபார்க்கப்படும். நிங்கள் முதலீட்டை தொடங்கிய பின்பு உங்களின் நிரந்தர ஓய்வூதியக் கணக்கு (PRN) எண் உருவாக்கப்படும். பணம் செலுத்திய ரசீதையும் பெறுவீர்கள்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Comments

Popular posts from this blog