உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் 4 ஹார்மோன்கள் : இவை எப்போதெல்லாம் சுரக்கும் தெரியுமா..?


உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் 4 ஹார்மோன்கள் : இவை எப்போதெல்லாம் சுரக்கும் தெரியுமா..?


ஹார்மோன்கள் என்ற வார்த்தை மூளையில் உள்ள ரசாயனங்கள் அதிகமாக சுரக்கும் இளம் வயதினரைப் பற்றியது என்று பலர் கருதுவதை பார்க்க முடிகிறது. உண்மையில் ஹார்மோன்கள் என்பவை பெண்களின் மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தவிர ஆண்கள் மற்றும் பெண்களின் உடல்களில் தோல் மாற்றங்கள் மற்றும் எடை அதிகரிப்பு முதல் பசி மற்றும் பாலியல் ஆர்வம் வரை. உடல் எவ்வளவு கால்சியத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் மற்றும் எவ்வளவு வெளியேற்ற வேண்டும். நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள் மற்றும் உங்கள் இதயம் எப்படி துடிக்கிறது அல்லது படபடக்கிறது உள்ளிட்ட பல செயல்முறைகளை ஹார்மோன்கள் வழிநடத்துகின்றன. ரசாயன தூதுவர்கள் எனப்படும் ஹார்மோன்கள் உடல் செயல்படும் விதம் முதல் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பது வரை அனைத்தையும் கட்டுப்படுத்த பல்வேறு உறுப்புகள் மற்றும் திசுக்களில் செயல்படுகின்றன.

ஹார்மோன்களின் ஒரு குழுவிற்கு ஏன் "ஃபீல்-குட் ஹார்மோன்ஸ்" என்று பெயர்.?

உடலும், மனமும் மகிழ்ச்சியின் உணர்வை அனுபவிக்கும் போது, உங்கள் ரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன்கள் வெளியிடப்படும். இந்த ஹார்மோன்களின் தொகுப்பே "ஃபீல்-குட் ஹார்மோன்ஸ்" என்று அழைக்கப்படுகிறது.

4 ஃபீல்-குட் ஹார்மோன்ஸ்கள்: டோபமைன், செரோடோனின், என்டோர்பின்ஸ், ஆக்ஸிடோசின்

டோபமைன்:

மூளையின் கற்றல், நினைவகம், மோட்டார் சிஸ்டம் செயல்பாடு மற்றும் பலவற்றுடன் மகிழ்ச்சியான உணர்வுகளுடன் தொடர்புடையது டோபமைன். நாம் தியானம் செய்யும் போது மூளை அதிக டோபமைனை வெளியிடுகிறது என்பதற்கும் சில சான்றுகள் உள்ளன. தியானத்தின் போது ஏற்படும் நனவின் மாற்றம் டோபமைனின் வெளியீட்டைத் தூண்டலாம்.

செரோடோனின்:

இந்த ஹார்மோன் நம் மனநிலை மற்றும் தூக்கம், பசி, செரிமானம், கற்றல் திறன் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த உதவுகிறது. சூரியன் அல்லது அதை பிரதிபலிக்கும் பிரகாசமான ஒளிக்கு நம் உடலை வெளிப்படுத்துவது செரோடோனின் அளவை இயற்கையாக அதிகரிக்க மற்றொரு வழி.

 

ஆக்ஸிடோசின்:

பிறந்த குழந்தையைப் பராமரிக்க, பாதுகாக்க, குழந்தையைச் சுற்றி அமைதியைப் பரப்ப, உற்சாகப்படுத்த என ஒரு தாய் பெறும் முக்கிய ஹார்மோன் ஆக்ஸிடோசின். நீங்கள் காதலை வெளிப்படுத்தும் போது, ஒருவரை கட்டிப்பிடிக்கும் போதும் சுரப்பது இதே ஹார்மோன்தான். எனவே இது "லவ் ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹார்மோன் தான் உறவுகளில் நம்பிக்கை, பச்சாதாபம் மற்றும் பிணைப்பை ஏற்படுத்த மக்களுக்கு உதவுகிறது.

உங்கள் பிள்ளைகளிடம் போலியாக பழகும் நண்பர்களை கண்டறிவது எப்படி? 

என்டோர்பின்ஸ்:

எண்டோர்பின்ஸ் நம் உடலின் இயற்கையான வலி நிவாரணியாகும், நம் உடல் மன அழுத்தம் அல்லது அசௌகரியத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த ஹார்மோன் சுரக்கிறது. உணவு உண்பது, வேலை செய்வது அல்லது உடலுறவு கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது என்டோர்பின்ஸ் அளவுகள் அதிகரிக்கும். சுருக்கமாக சொன்னால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது சுரக்கும் இந்த ஹார்மோன் தான் பாலியல் செயல்பாடு அல்லது மராத்தான் ஓட்டம் அல்லது சாப்பிடுவது போன்றவற்றுக்கு உதவுகிறது.

மகிழ்ச்சியான ஹார்மோன்களுக்கான உணவுகள்:

* கோழி

* பால், சீஸ் மற்றும் தயிர் போன்ற பால் உணவுகள்

* அவகேடோ

* வாழைப்பழங்கள்

* பூசணி மற்றும் எள் விதைகள்

* சோயா

 

Comments

Popular posts from this blog