ஆம்பூர்: மார்பிங் போட்டோ; திருமணமான பெண்ணிடம் பணம் பறிப்பு! - 3 இளைஞர்கள் சிறையிலடைப்பு
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலருக்கு சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியுற்றார். தேர்தல் பிரசாரத்தின்போது, அந்தப் பெண்ணுக்கு ரெட்டித்தோப்புப் பகுதியைச் சேர்ந்த சதாம் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அருகருகே நின்று செல்ஃபி எடுத்துகொண்டுள்ளனர். மேலும், அந்தப் பெண்ணை வெவ்வேறு கோணத்திலும் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார் சதாம்.
இந்த நிலையில், சமீபத்தில் அந்தப் பெண்ணுக்குப் போன் செய்த சதாம் தனக்கு அவசரமாகப் பணம் தேவை எனக் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை எனக்கூறிய பெண்ணை மிரட்டியுள்ளார்....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment